ஆன்மீகம் வியாபாரமா ... Editorial of a Leading Daily Paper
ஆன்மீகம் வியாபாரமா ? உலகத்தில் ஒருவரையும் நம்பாதே குருநாதனை தவிர என்பது பிரபலமான மூதுரை. ஆனால் உண்மையான குருவை தெரிந்து கொள்வது எப்படி? அவருடைய தன்மை என்ன ? எப்படி இருப்பார் ? அடிக்கடி முக்கிய புள்ளிகள் தரிசனம் செய்தால் அவர் நம்ப தகுந்த குரு ஆகிவிடுவாரா? பெரிய அளவில் நிகழ்ச்சிகள், யாகங்கள் செய்தால் ஜகத்குருவா? நாள் தவறாமல் தொலைக்காட்சிகளில் காட்சி தந்தால் மஹாஸ்வாமியா? வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டால் யோகியா? ஆபரணங்களை ஷிரிஷ்ட்டித்தால் அவதார புருஷரா? மாபெரும் மாளிகைகள் காட்டியதால் பரமஹம்ச பரிவ்ராஜகர் ஆவாரா? கோடி கோடி பணம் வசூல் செய்து விட்டால் சித்த புருஷரா? விருப்பு வெறுப்புகள் உள்ளவர்கள் லாபியிங் செய்பவர்கள் பீடாதிபதிகளா? யார் உண்மையான குரு? இன்றய குருமார்கள் சிஷ்யன் எவ்வளவு கொடுப்பான்? எவற்றை அளிக்கக்கூடியவன்? எந்த வி.ஐ.பி அழைத்து வரக்கூடியவன் என்பதயே பார்க்கிறார்கள். வேறு ஒருவருக்கு போட்டியாக வளர்வதை லக்ஷியமாக கொண்டவர்களே தவிர சனாதன தர்மத்தை காப்பாற்றுவது சிறிதளவும் தென்படாது. ஆச்சிரியம் என்னவென்றால் இவர்கள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் சம்பிரதாயத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும். ஆ...